இந்த உலகில் உள்ள அணைத்து நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் வணக்கம்,
நான் இந்த பதிவின் மூலம் இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல ஆசைபடுகிறேன். ஒருவர் என்னோடு Muscat -ல் பணிபுரியும் நண்பர் அண்ணாதுரை. அவர்தான் எனக்கு ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிமுகபடுத்தி வைத்தார். இன்னொருவர் பதிவுலக தோழி ஆனந்தி அவர்கள், அவர்தான் நான் என்னுடைய பதிவை யாருமே படிக்கவில்லை என்று விரக்தி அடைந்து இருந்த சமயத்தில், என்னுடைய பதிவை படித்து என்னுடுய எண்ணத்தை புரிந்துகொண்டு எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டவர்.
அதுமட்டும் இல்லாமல் எனக்கு நல்ல ஆலோசைனைகளையும் வழங்கியவர். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க இனிமேல் யாரையும் காப்பி அடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கு சின்ன வயசில் இருந்து சமுதாயத்தில் நல்ல விசயங்களுக்காக பிரபலம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது இந்த பதிவுலகம் மூலம் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
இப்போது என்னுடம் பணிபுரிந்த நண்பர் விடுமுறையில் சென்று உள்ளதாலும் , கொஞ்சம் வேலைப்பளுவும் அதிகமாக இருப்பதாலும் புதிய இடுகைகள் எழுத முடியவில்லை. ஆனந்தி அவர்களின் பின்னூட்டம் படித்தவுடன் புதிய உற்சாகம் வந்துள்ளது. நான் மீண்டும் வந்து கலக்குவேன்.
அதுவரை என்னை மறந்துவிடாமல் அடிக்கடி வந்து பார்த்து விட்டும் போகும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அழகர்.
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் . மீண்டும் வருவேன்
ReplyDelete@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
ReplyDeleteவணக்கம் பனித்துளி சங்கர் அவர்களே,
உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் வருகையை மேன்மேலும் எதிர்பார்க்கும் நண்பன் அழகர். நீங்கள் ஒரு பிரபலமான பதிவர். உங்கள் வருகையால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உங்கள் Blog நான் நிறைய படித்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது . என்னுடைய பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவுக்கும்படி உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Azhagar