இந்தியா சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்னும் இந்தியா சுதந்திரம் பெறவில்லை.
வெள்ளைக்காரனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம் இப்போது அரசியல்வாதிகள் என்ற கொள்ளைக்காரர்களிடம் சிக்கி இருக்கிறது.இந்த கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்போது விடுதலை அடைகிறோமோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.
எனக்கு அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றபடுவதை காண சகிக்கவில்லை. நான் ரொம்ப நாட்களாக மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் பிளாக்கர் என்று ஒன்று இருப்பது அண்ணாதுரை என்ற நண்பர் மூலமாக தெரிய வந்தது. சரி நம்ம எண்ணங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.
இதற்கிடையே பூங்குன்றன் என்ற என்னுடைய நண்பர் நான் எழுதியதை படித்துவிட்டு, நல்லாத்தான் எழுதுகிறீர்கள் ஆனால் எதனை பேர் வந்தாலும் நம் மக்கள் திருந்த போவதில்லை அதுமட்டுமில்லாமல் அரசியலை பற்றி ஏராளமான பேர் எழுதிகிறார்கள், நீங்கள் வேறு எதாவது உருப்படியாக எழுதுங்கள் என்று கூறினார்.
அவருடைய நல்ல எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த ப்ளாக்கை எழுதுகிறேன்.
சரி தலைப்புக்கேற்ற விசயத்திற்கு வருவோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் கட்டுமான பொருட்களின் விலை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் வீடு கட்டும்போது செங்கல் வேலையில் செலவை குறைப்பது என்று பார்ப்போம்.
பொதுவாக செங்கல் கட்டு வேலை English Bond அல்லது Flemish Bond என்ற இருவகையில் கட்டுவார்கள். மேற்கண்ட முறையில் செங்கல் கட்டு வேலை செய்யும்போது நிறய செங்கற்கள் தேவைபடுகிறது.
இதற்க்கு பதிலாக Rat -trap Bond என்ற முறையில் கட்டும்போது குறைவான செங்கற்கள் போதும்.
இந்த Rat - Trap Bond மூலம் கிடைக்கும் நன்மைகள் சில:-
1 ) இதன் strength மற்ற Bond களின் strength க்கு இணையானது. ஆனால் 20 %
செங்கற்கள் குறைவாக பயன்படும்.
2) மற்ற Bond களுடன் ஒப்பிடும்போது மொத்தமாக 26 % செலவை சேமிக்கலாம்.
3) இதன் நடுவில் Cavity area என்று சொல்லக்கூடிய வெற்றிடம் இருப்பதால் இது Thermal Insulationa-ஆக செயல்படுகிறது. தெற்கு ஆசிய நாடுகளில் வெப்பம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அந்த நாடுகளுக்கு மிகவும் உகந்தது.
4 ) இரண்டு அடுக்கு Buildings இந்த முறையில் கட்டலாம்.
5 ) RCC Framed Structure லும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
6 ) இந்த கட்டுமான முறையில் செங்கல்லின் ஒழுங்கான முகம் (Face ) இரண்டு பக்கமும் தெரிவதால் இது பூச்சு வேலை செய்யாமலே பார்பதற்கு அழகாக இருக்கும்.
7) வீட்டின் உள்பக்கம் கண்டிப்பாக பூசித்தான் ஆகவேண்டும். ஆனால் வெளிப்பக்கம் pointing என்ற வேலை மூலம் இணைப்புகளுக்கு இடையே கோடு அடித்துவிட்டால் மிக அழகாகவும்
design ஆகவும் தெரியும். இதனால் வெளிப்புற சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய தேவை இல்லை.இதன் மூலம் வெளிப்புற பூச்சுக்கு தேவையான சிமெண்ட், மணல் மற்றும் ஆள்கூளிகளில் இருந்து நமக்கு
சேமிப்பு கிடைக்கிறது.
design ஆகவும் தெரியும். இதனால் வெளிப்புற சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய தேவை இல்லை.இதன் மூலம் வெளிப்புற பூச்சுக்கு தேவையான சிமெண்ட், மணல் மற்றும் ஆள்கூளிகளில் இருந்து நமக்கு
சேமிப்பு கிடைக்கிறது.
உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இந்த முறையில்தான் அரசாங்க அலுவலகங்கள் கட்டபடுகின்றன. இந்த முறையில் கட்டிமுடிக்கப்பட்ட ஒரு Building உங்கள் பார்வைக்காக.

நீங்களும் வீடு கட்டும்போது முடிந்தால் இந்த முறையில் வீடுகட்டி பாருங்கள் அல்லது உங்கள் உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் comments பகுதியில் தெரியபடுத்தவும்
நன்றி,
அழகர்
நன்றி !!! அருமையான தகவல், மேலும் கட்டிடங்களுக்கான் வரைபடங்கள் வெள்யிடவும்
ReplyDeleteதீபாகரன்
நன்றி நண்பர் தீபாகரன் அவர்களே,
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி, நான் ஒரு civil Engineer ஆக இருப்பதால் இந்த துறை பற்றி melum எழுதலாம் என்று இருக்கிறேன். வரைபடங்களை இணைக்க முயச்சி செய்கிறேன்.
நன்றி,
Azhagar