வணக்கம் அன்பர்களே,
வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்சிகள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் தற்போது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உலவி வருகிறது.
இந்த சமயத்தில் செப்டம்பர் முதல் தேதியிட்ட ஜூனியர் விகடனில் மாமன்னர் ராஜராஜனை பற்றி கவிஞர் இன்குலாப் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். முதலில் இப்பேற்பட்ட தரக்குறைவான கவிதையை வெளியிட்ட ஜூவிக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
பிறகு இவ்வளவு கேவலமான ஒரு தலைப்பட்சமான கவிதையை எழுதியவரை புகழ்ந்து எழுதுவது ரொம்ப ஓவர். இந்த காலத்தில் சராசரி மனிதனுக்கு நடக்கும் பிரச்சினைகளை தீர்க்காமல் நாளொரு பொழுதும் மாநாடும் புகழ் பாடும் கச்சேரி என்று திரியும் கருணாவையும் அவரது அரசையும் இன்குலாப் விமர்சிக்கலாம் . நாமும் வரவேற்க்க கூடியதே. ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் மன்னர் ராஜராஜனை பற்றி மட்டமாக எழுதுவதற்கு இவருக்கு அருகதை இல்லை. இதுபோன்ற மட்டமான கவிதைகளை வெளியிட்டு ராஜராஜன் போன்ற சிறந்த மன்னர்களுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று ஜூவியை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வளவு திமிராக பேசும் இவர் இந்தியாவில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது ஏன் தாஜ்மஹாலை தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார்கள் என்று கவிதை எழுத முடியுமா? இல்லை பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு பல முறை சோமநாதர் ஆலயத்தை கொள்ளை அடித்த கஜினி முஹம்மதுவை பற்றி எழுத முடியுமா? இல்லை பதவிக்காக கூட பிறந்தவர்கள், அப்பா அம்மா மற்றும் உறவினர்களை கூட கொன்று குவித்து கண்களை தோண்டி எடுத்து இந்தியாவில் ஆட்சி செய்த முகலாயர்கள் என்ற இவருடைய முன்னோர்களை பற்றி எழுத முடியுமா?
மன்னர் ராஜராஜன் தன்னுடைய சித்தப்பா ஆட்சிக்கு வர விரும்பியதை தெரிந்துகொண்டு அவருக்கு அந்த பதவியை விட்டுகொடுத்தவர். இதுபோன்ற பரந்த மனப்பான்மை கொண்ட மன்னர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இது ஒரு எடுத்துக்காட்டுதான். இது மாதிரி நிறைய சொல்லலாம். இன்குலாப் மாதிரி குறுகிய மனப்பான்மை உள்ளவர்களின் மட்டமான கவிதைகளை இனிமேல் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆனாலும் கருணாநிதிக்கு பிடிக்கும் என்பதற்காக வைரமுத்து போன்றோ வாலி போன்ற துதி பாடாமல் இருப்பதற்காக அவரை பாராட்டுகிறேன்.
உண்மை சுடும்.
தஞ்சை பெரிய கோயில் போன்ற ஒரு பிருமாண்டம் நிறைந்த, பொறியியல் விந்தைகள் மிக்க , அபூர்வ அமைப்பு வேறு எங்கிலும் இல்லை. ஆனால் அதை கட்டியவன் ஒரு தமிழ் மன்னன் அதுவும் ஒரு இந்து / திராவிடனின் கோவில் என்ற கேவலமான நினைப்பால் இருட்டடிப்பு செய்தனர். இந்தியா என்றால் அது தாஜ்மகால் தான் வேறு ஒன்றும் இங்கு இல்லை என்ற எண்ணம் வளர விட்டவர்கள் மைனாரிட்டி ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு கடைசியில் அவர்களையும் நடுத்தெருவில் விட்டவர்கள்தான். இந்த வளர்ப்பில் வந்தவர்கள் தான் இன்குலாபு போன்றவர்கள். இப்படித்தான் எழுத தோன்றும் அவர்களுக்கு.
ReplyDelete@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteவணக்கம் kaக்கு மாணிக்கம் அவர்களே,
உங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
நீங்கள் சொல்வது உண்மைதான். நம் விரோதிகளை விடுங்கள். நம் மக்களே நம்முடைய முன்னோர்கள் செய்த சாதனைகளை பற்றி பேசாமல் எங்கிருந்தோ வந்தவர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். நாம் இணைந்து அவர்களை அறியாமையில் இருந்து விடுவிப்போம். தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.
நன்றி
Azhakar