வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டையில் நடுக்கும் திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. நான் மற்றும் என்னை போல் வெளியூரில் இருக்கும் எல்லாரும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவோம். தாமணி செல்லையனார் கோயில் என்று ஒன்று இருக்கிறது . இதுவும் ஐயனார் கோவில்தான்
. ஆனால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் ஐயனார் கோயில் மாதிரி இல்லை. அங்கு எல்லாம் அய்யனாரை ஊருக்கு எல்லையில் காவல் தெய்வமாக பெரிய சிலை மட்டும் செய்து வைத்து இருப்பார்கள். ஆனால் நமது பெரியகொட்டையில் சிறந்த பாரம்பரிய கோயில் கட்டி கொண்டாடுகிறார்கள். பெரியகோட்டை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் பனிரெண்டு ஐயனார் கோயில்கள் உள்ளன. அவைகள் காவல் தெய்வங்கள் மட்டும் இல்லை ஒவ்வொரு ஐயனாரும் ஒவ்வொரு குறிப்பிட்ட மக்களுக்கு குல தெய்வம் ஆகும். அணைத்து ஐயனார் கோயிலுக்கும் தாய்வீடு மாதிரி தாமணி செல்லையனார் கோயில் . இந்த ஐயனார்களுக்கு பாரம்பரிய கோயில் மட்டும் இல்லை அணைத்து ஐயனார்களுக்கும் தனிதனி ஐம்பொன் சிலைகளும் உண்டு. எல்லா ஐயனர்களுக்கும் முப்பத்தி இரண்டு கிராமங்களும் சேர்ந்து நடத்தும் திருவிழாதான் பெரியகோட்டை திருவிழா . இதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு அய்யனாருக்கும் அந்தந்த ஊர்களில் தனிதனி திருவிழா வேறு நடக்கும். காப்பு கட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும் . முதல் எட்டு நாட்கள் சாமி அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்சிகள் தாமணி செல்லையனார் கோயிலில் நடக்கும். எட்டாம் நாள் இரவு அணைத்து ஐயனார் கேடயங்களையும் வரிசையாக வைத்து அலங்கரித்து மின்னொளியில் மின்ன விடுவார்கள். அதை காண கண்கள் கோடி வேண்டும். தேவலோகத்தில் இந்திரா விழா கூட இப்படி நடக்கும் என்பது சந்தேகம்தான். அன்று இரவு திரைப்படம் அல்லது பாட்டு கச்சேரி அல்லது கரகாட்டம் அதாவது ஒரு நிகழ்ச்சி வைப்பார்கள். எல்லா சாமிகளும் அலங்காரம் முடித்த பின்பு விடியக்காலை சாமிகளை தூக்கி கொண்டு இளங்கோயில் என்ற கோயிலுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு வைத்து இரண்டு நாள் திருவிழா நடக்கும். தாமணி செல்லையனார் கோயிலில் இருந்து வரும் வழியில் சில சம்பிரதாய நிகழ்சிகள் நடக்கும் . அதை பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை . தெரிந்தவுடன் அதை பற்றி விரிவாக எழுதுகிறேன். ஆனால் ஊர்வலம் வரும்போது பார்க்க வேண்டுமே வானவீதியில் அணைத்து கடவுள்களும் அணிவகுத்து வந்தால் கூட இதற்கு இணை ஆகுமா என்று தெரியவில்லை. மண்டுகுண்டு என்ற ஊரணி கரையில் வானவேடிக்கை நிகழ்ச்சி அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற மேலை நாடுகளை விட கூட மிக பிரமாண்டமாக இருக்கும். ஒரு செய்தி ஊடகம் கூட பெரியகோட்டை பகுதிக்கு வருவதில்லை அதனால் இதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் மண்டுகுண்டு ஊரணி கார்த்திகை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதை பார்க்கும்போது கைலாயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியை விட அழகாக இருக்கும். பிறகு வின்னி மரம் என்ற இடத்தில ஆடு பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும் . அதன் பிறகு அதிகாலையில் அணைத்து சாமிகளையும் இளங்கோயிலில் வரிசையில் வைத்து விடுவார்கள்.
ஒன்பதாம் நாள் இரவு மிக பிரமாண்டமாக மின்னொளி கலை அரங்கில் புராண நாடகம் நடை பெரும். அதை காண பெரும்பாலான மக்கள் வந்து இருப்பார்கள் . விடிய விடிய இருந்து நாடகத்தை ரசித்துவிட்டு செல்வார்கள். வள்ளி திருமணம், அரிச்சந்திரா போன்ற நாடகங்கள் நடத்தப்படும், நாடகத்தின் ஆரம்பமே அமர்களமாக இருக்கும். பபூன் மற்றும் டான்ஸ் காமிக் இருவரும் சேர்ந்து நிறைய ஜோக் அடிப்பார்கள் . அதன் பிறகு நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் வந்து அவர் அவர் திறமையை வசங்களாலும் பாடல்களாலும் காட்டுவார்கள்.
பத்தாம் நாள் காலையில் இருந்து பக்தர்கள் அனைவரும் அவர்களுடைய நேர்த்தி கடன்களை செய்வார்கள். சாமிகளுக்கு அர்ச்சனை செய்வார்கள். எல்லோர் வீட்டிலும் அன்று செட்டினாட்டிற்கு உண்டான சுவை மற்றும் காரம் மிகுந்த விருந்து இருக்கும் . மதிய விருந்து முடிந்த பிறகு அனைவரும் கோயிலில் ஆஜர் ஆகிவிடுவோம். ஒன்பது நாட்கள் திருவிழாவிற்கு வராதவர்கள் கூட இன்று வந்துவிடுவார்கள் . கோயில் வளாகம் முழுதும் அணைத்து விதமான் கடைகள் முளைத்து இருக்கும். அனைவரும் அவரவர்க்கு தேவையான பொருள்களை வாங்கி செல்வார்கள். ஒரு பக்கம் சிலம்பாட்டம், திராம்செட் ஆட்டம், இளைஞர்களின் டான்ஸ் என்று பார்த்தாலும் திருவிழா ஓஹோ என்று கலை கட்டும். இதில் ஒரு முக்கியமான விஷத்தை இதுவரை சொல்லாமல் விட்டுவிட்டேன். அது என்னவென்றால் காதல். இந்த திருவிழாவிற்கு இளைஞர்களிடம் வரவேற்ப்பு இருப்பதே காதளினான்ல்தான். எட்டாம் நாள் இரவில் இருந்து தங்களின் காதலன் காதலியை பார்த்து பார்த்தே கழுத்து திரும்பி விடும். ஒருவர்க்கு ஒருவர் பரிசு வாங்கி கொடுப்பார்கள். இதற்காகவே அழகாக டிரஸ் அணிந்து கொண்டு வந்திருப்பார்கள். இந்த காதல் கதை தனி டிராக் . மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கும்போது ஒருபக்கம் யாருக்காவது இரண்டு மூன்று குரூப்களுக்கு இடையே சண்டை வந்து விடும். இந்த பகுதியில் இன்னொரு விரும்பத்தகாத கலாசாரம் உள்ளது. அதாவது இதுமாதிரி திருவிழா, கல்யாணம் மற்றும் சாவு வீடுகளில் திடீரென்று சண்டை அடித்து கொள்வார்கள். இது ரொம்ப நாளாக நடக்கிறது. யாரும் திருந்தினபாடில்லை. கடைசியில் வடிவேலு சொல்ற மாதிரி ஸ்டார்டிங் நல்லாத்தான் இருந்துச்சு பினிஷிங் தான் சரியில்லை மாதிரி முடிஞ்சிடும்.
இது ஒருபுறம் நடக்க அணைத்து அய்யனார்களையும் மறுபடியும் தாய் வீட்டிற்கு கொண்டு போக ஏற்ப்பாடுகளை செய்வார்கள். அப்பறம் எல்லாம் முடிந்த பிறகு சாமி தாய் வீட்டிற்கு போய்விடும். அனைவருக்கும் திருவிழா இவ்வளவு சீக்கிரம் முடிந்து போச்சே என்று வருத்தமாக இருக்கும். மீண்டும் அடுத்த திருவிழா வரும் வரை ஆவலுடன் காத்துக்கொண்டிருப்போம்.
திருவிழா ஏன் நம் முன்னோர்கள் நடத்தினார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இங்கு வந்து பார்த்தல் தெரியும். நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள உறவை புதுப்பிக்கவே என்று தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு வறுமையாக இருந்தாலும் திருவிழா என்றால் ஊரில் குதூகலந்தான். நான் இப்போதுதான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சி இருக்கிறேன். எதுவும் பிழை இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளவும். இந்த தலைப்புக்கு உரிய படங்கள் இன்னும் சேகரிக்கவில்லை. சேகரித்த பின்பு பதிவேற்றம் செய்யப்படும்.
நன்றி
தமில்ஸ்.
No comments:
Post a Comment