வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டை என்றவுடன் அங்கு பெரிய கோட்டை இருக்கு என்று நினைக்க வேண்டாம். பெரியகோட்டை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதை பற்றி ஒரு ஐதீகம் உண்டு. முன்பு ஒரு காலத்தில் பூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று இருட்டிய பிறகு விடிவதற்குள் கோயில் கட்டுவார்கலாம். அப்படி பெரியகொட்டையிலும் கட்ட ஆரம்பிக்கும் போது பொழுது விடிந்து விட்டதாம். அதனால் பெரிய சுற்று சுவர் கட்டுவதற்க்கு அடித்தளம் போட்ட படியே பூதங்கள் சென்று விட்டனவாம். அந்த சுண்டு சுவர் அடித்தளத்தை இன்றும் காணலாம். அங்குதான் இந்த காலத்தில் பஞ்சாயத்து எல்லாம் நடக்கும்.
பெரியகோட்டையில் முக்கிய தொழில் விவசாயம். கண்மாய் என்று சொல்லகூடிய ஏரிகள்தான் நீர் ஆதாரங்கள். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் விவசாயம் நன்றாக இருந்தது. மழையும் காலா காலத்தில் பெய்தது. அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி வரை இங்கு உற்பத்தி ஆகும் காய்கறிகள்தான் பிரபலம் . ஆனால் இப்போது நிலைமை எல்லாம் மாறிவிட்டது.
மழை சரியாக பெய்வதில்லை. நிறைய பேர் விவசாயத்தை விட்டுவிட்டார்கள். மோட்டார் கேணி வைத்து இருப்பவர்கள் சிலபேர் இன்னும் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது நிறையபேர் மல்லிகை பூ உற்பத்தி செய்தும் மொத்தமாக வாங்கியும் அதை நேர்த்தியாக இன்னும் சில பூக்களோடு சேர்த்து கட்டி விற்கிறார்கள். திருவிழாக்களில் மல்லிகை பூ விற்பனை சக்கை போடு போடும் .மற்ற நாட்களில் சந்தை மற்றும் கடைத்தெருக்களில் கூவி கூவி விற்பார்கள். என்ன செய்வது அவர்களுக்கு தெரிந்த கைத்தொழில் அதுதான்.
மதுரை வரை பெரியகோட்டை மல்லிக்கு செம கிராக்கிதான். அதுதவிர இன்றைய இளைஞர்கள் அனைவரும் செய்யும் தொழில் சிற்ப வேலை. சிற்ப வேலைக்கு எந்த மினிமம் தகுதியும் தேவை இல்லை என்பதால் எல்லா பசங்களும் அந்த வேலைக்கு ஈசியாக போய்விடுவார்கள். நான்கூட அங்கு போயிட்டு வந்தவன்தான். மற்ற கூலி வேலைகளை உடன் ஒப்பிடும்போது ஆரம்பத்தில் சம்பளம் கொஞ்சம் கூட மற்றும் எந்த கட்டுப்பாடும் இல்லை. நண்பர்களோடு ஜாலியாக் இருக்கலாம். சீக்கிரம் சிகரெட், தண்ணி மற்றும் சீட்டு ஆட்டம் அனைத்தும் கத்துக்கலாம். பெரியகோட்டையில் நிறைய குடும்பங்களின் வறுமையை இந்த சிற்ப தொழில்தான் ஒழித்து என்றால் மிகை ஆகாது. இந்த சிற்ப தொழிலால் நிறைய முன்னுக்கு வந்தவர்களும் கொஞ்சம் வீணா போனவர்களும் இருக்கிறார்கள். நாம் வெளிநாடு சென்று சம்பாதிப்பதால் எப்படி அந்நிய செலவாணி இந்திய அரசுக்கு வருகிறதோ அதுமாதிரிதான் இவர்கள் வெளியூர்களுக்கும் சென்று வருகையில் பண புழக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த சிற்ப வேலை கர்நாடகாவில் தான் அதிகம். தமிழ்நாட்டின் காஞ்சி, மாமல்லபுரம், சென்னை போன்ற பகுதிகளில் கொஞ்சம் வேலை இருக்கும். எந்தந்த ஊரில் வேலை இருக்கோ அங்கு பொய் செய்து விட்டு பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். பண்டிகை முடிந்த பிறகு இவர்களுக்கு பயங்கர கிராக்கி இருக்கும். சிற்ப வேலை கான்றக்டர்கள் கார் எடுத்துக்கொண்டு வந்து அட்வான்ஸ் கொடுத்து வேலைக்கு கூப்பிடுவார்கள். இவர்கள் அதுமாதிரி நிறையபேரிடம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு எல்லாரிடமும் பிகு பண்ணுவார்கள். அதே சமயம் இது மிகவும் அபாயகரமான வேலை . சின்ன தவறு செய்தால் கூட உடல் உறுப்பு மற்றும் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டு விடும். இந்த சிற்ப வேலையால் தான் பெரியகோட்டயில் ஓரளவுக்கு மக்களால் சமாளிக்க முடிகிறது. ஏனென்றால் அது அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
No comments:
Post a Comment