Saturday, August 21, 2010

oru kiramam

வணக்கம் blog nanbarkale

எனது கிராமத்தை பற்றி ஒரு சின்ன அறிமுகம். பெரியகோட்டை என்ற ஊர் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார் பனிரெண்டு கி.மீ மற்றும் புதுவயலில் இருந்து சுமார் ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியகோட்டை பெரிய அரசியல் முக்யத்துவம் உள்ள ஊராக தெரியவில்லை. ஆனால் அப்பகுதி மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மிக்க ஊர். பெரியகோட்டை என்பது முப்பத்தி இரண்டு ஊர்களை அடக்கிய பகுதியை குறிக்கும். தமிழ் சினிமாவில் வரும் பதினெட்டு பட்டி போல் இந்த முப்பத்தி இரண்டு கிராமம். இதை பெரியகோட்டை நாடு என்று சொல்வார்கள். இதற்கு பக்கத்தில் சாக்கை நாடு, தேர் பொய் நாடு, பாலை நாடு மற்றும் வம்பரம்பட்டி என்ற பகுதிகள் உள்ளனன். இந்த நாட்டின் பெயர்களை பார்த்தால் ஊரின் பெயர்களால் பிரிக்கப்பட்ட மாதிரி இருக்கும். ஆனால் உண்மையில் சாதிகளால் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாடுகளில் வருடா வருடம் கோயில் திருவிழா நடக்கும் அப்போது இந்த நாடுகளுக்கு இடையே சண்டைகள் நடக்கும். இதில் உயிர் பலி எல்லாம் நடந்தது உண்டு. பெரியகோட்டையில் முத்திரையர் சமுதாய மக்களும் சாக்கோட்டையில் செட்டியார், கள்ளர், பறையர் என பலதரப்பட்ட மக்களும் வம்பரம்பட்டியில் vallambar சமுதாய மக்களும் தேர் பொய் nattil கள்ளர் சமுதாய மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்த சாதியினருக்குள் யார் பெரியார் என்ற சண்டைதான் திருவிழா காலங்களில் நடக்கும்.
சரி நாம் இப்போது பெரியகோட்டை பற்றிய விசயத்துக்கு வருவோம். நாடாளமன்றம் மற்றும் சட்டமன்ற வேட்பாளர் வெற்றிக்கு கணிசமான இத்தொகுதி மக்களின் வாக்கு முக்கிய காரணியாக
இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு இந்த பகுதியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த நிலைமை சுதந்திரம் பெற்றdhu தொட்டு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் அப்பகுதி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெரியகோட்டை என்ற இந்த ஊர் இந்தியாவில் இருக்கிறதா இல்லையா என்று கூட ஆட்சியாளர்களுக்கு தெரியாது. அதுமட்டும் இல்லை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் கூட தெரியாது . சுதந்திரம் வாங்கி அறுபத்தி மூன்று ஆண்டு ஆகியும் கூட ஒரு செய்தி கூட இந்த பகுதியை பற்றி வரவில்லை என்றல் பார்த்து கொள்ளுங்கள். இத்தொகுதி எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கள் ஒருதடவை கூட பேசியதில்லை . இதில் முக்கியமான விஜயம் சிவகங்கை சீமான் பண முதலிகளின் ஏசென்ட் ப.சிதம்பரம் அவர்கள் முக்கியமானவர். இந்தியாவின் சிறந்த நிதியமைச்சர் மற்றும் பொருளாதார மேதை என்று தன்னைத்தானே பீற்றிகொள்ளும் அவரின் தொகுதிக்கு உட்பட்ட இந்த ஊரில் இன்னும் அனைவரும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்.
அவர்களுக்கு சுகாதாரம், நல்ல கல்வி மற்றும் குடிநீர் பற்றி ஒன்றுமே தெரியாது.
அவர்களும் இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி இருக்கிறேன் இது மாதிரி நிறய அவலங்கள் இங்கு இருக்கிறது. இந்த அரசியல்வாதிகள் இந்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடுகள் அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் நாங்கள்தான் நம்பர் ஒன்று என்று சொல்லிகொள்ளும் தினமலர் போன்ற பத்திரிக்கைகல் கூட இந்த ஊரை கண்டுகொள்வதில்லை. அவர்கள் தெரியாமல் இருக்கிறார்களா அல்லது இந்த பகுதியை பற்றி செய்தி வெளியிட்டால் நமக்கு என்ன லாபம் என்று நினைகிரார்களா எண்டு கடவுளுக்குதான் வெளிச்சம்.

பெரியகோட்டை ஒரு ஏழ்மையான பகுதி. பெருவாரியான மக்கள் இன்னும் வறுமை கோட்டுக்கு கீழே தான் ullanar. இங்கு திருவிழா காலங்களில் கோயில் வரி வசூலிப்பார்கள் அந்த வரியை கொள்ளை அடித்தவர்களும் பஞ்சாயத் தலைவர்களாக இருந்தவர்களும் இருபவர்களும் கோணங்கி பார்க்கிறேன் சாமி அழைக்கிறேன் என்று சொல்பவர்களும் ஏழை மக்களின் சொத்துக்களை அபகரிப்பவர்களும் மட்டுமே பணக்காரர்களாக இருகிர்ரார்கள். உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்களை கூட ஏழை ஆக்க இந்த கொள்ளைகாரர்கள் முயற்சிப்பார்கல்.
இதற்கு எல்லாம் காரணம் இப்பகுதி மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைமுறை கொஞ்சம் பேர் படிகிறார்கள் என்று நினைக்கிறன். பொருத்து இருந்து பார்போம்.
இன்னும் நிறைய தொடரும்.

No comments:

Post a Comment