Sunday, October 24, 2010

கடவுளின் சொந்த இடம்

வணக்கம் Bloggers ,
                   சில நண்பர்களை நான் எதாவது கேட்டால் நான் Busy ஆக இருக்கிறேன் என்று அடிக்கடி பீத்திகொல்வார்கள். அதுமாதிரி நீங்களும் இல்லாமல் அவ்வப்போது கீழே இணைக்கப்பட்டுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப அவசியம். நானும் இனிமேல்தான் சென்று வரவேண்டும்.

Saturday, October 23, 2010

வீடு கட்டும்போது செங்கல் வேளையில் செலவை குறைப்பது எப்படி?

வணக்கம் Bloggers

 இந்தியா சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்னும் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. 
வெள்ளைக்காரனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம் இப்போது அரசியல்வாதிகள் என்ற கொள்ளைக்காரர்களிடம் சிக்கி இருக்கிறது.
இந்த    கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்போது விடுதலை அடைகிறோமோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.
     எனக்கு அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றபடுவதை காண சகிக்கவில்லை. நான் ரொம்ப நாட்களாக மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் பிளாக்கர் என்று ஒன்று இருப்பது அண்ணாதுரை என்ற நண்பர் மூலமாக தெரிய வந்தது. சரி நம்ம எண்ணங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.
  
இதற்கிடையே பூங்குன்றன் என்ற என்னுடைய நண்பர்  நான் எழுதியதை படித்துவிட்டு, நல்லாத்தான் எழுதுகிறீர்கள் ஆனால் எதனை பேர் வந்தாலும் நம் மக்கள் திருந்த போவதில்லை அதுமட்டுமில்லாமல் அரசியலை பற்றி ஏராளமான பேர் எழுதிகிறார்கள், நீங்கள் வேறு எதாவது உருப்படியாக எழுதுங்கள் என்று கூறினார். 
அவருடைய நல்ல எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த ப்ளாக்கை எழுதுகிறேன்.
சரி தலைப்புக்கேற்ற விசயத்திற்கு வருவோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் கட்டுமான பொருட்களின் விலை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் வீடு கட்டும்போது செங்கல் வேலையில் செலவை குறைப்பது என்று பார்ப்போம்.
பொதுவாக செங்கல் கட்டு வேலை English Bond அல்லது Flemish Bond என்ற இருவகையில் கட்டுவார்கள். மேற்கண்ட முறையில் செங்கல் கட்டு வேலை செய்யும்போது நிறய செங்கற்கள் தேவைபடுகிறது.

Wednesday, October 20, 2010

ஆசைப்படத்தான் முடியும் என்று நினைக்கிறேன்

வணக்கம் நண்பர்களே,

அய்யா (கயவர்) கருணா மற்றும் சொம்புசிங்கு ஆட்சி நடப்பதால் சாதாரண  மக்கள்   வீடு கட்டுவதை பற்றி ஆசைதான் பட முடியும். அதனால் இந்த படங்களை பார்த்து நீங்களும் ஆசைபடுங்கள் . வேண்டியவர்கள் நல்ல மாடல்களை தேர்ந்து எடுத்து கொள்ளவும்.
இந்த அழகான படங்களை அனுப்பி தந்த தோழி வெண்ணிலா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Model -1

Model -2


Model -3

Model -4

Model -5

Model -6

Model -7

Model -8

Model -9

எல்லாத்தையும் விட இதுதான் சூப்பர் மாடல்.


நன்றி 
Azhagar

Monday, September 20, 2010

பெண்கள் virumbuvadhu

நண்பர்களே,

என்னால் தொடர்ந்து எழுதமுடியவில்லை அதனால் படித்ததை சுட்டு இங்கே பதிவு seydhu இருக்கிறேன். இதெல்லாம் ஒரு பொழைப்பா என்று திட்டாமல் வேறு எங்கும் படிக்காதவர்கள் இங்கு படித்து பயன் பெறவும்.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், "பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்...' என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்."அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!' என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், "வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!' என்கிறார்.

இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: "இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது...' என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: "ஐயோ... டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!' என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். "வேலை இருக் கிறது, "டிவி'யை பார்த்துக் கொண்டு தூங்கு!' என கணவர்கள் சொல்லக் கூடாது. பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான். ***



Nandri nallavan
௨௯௪௨" href="http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=

Friday, September 17, 2010

நன்றி சொல்ல வேண்டும்

இந்த உலகில் உள்ள அணைத்து நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் வணக்கம்,
நான் இந்த பதிவின் மூலம் இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல ஆசைபடுகிறேன். ஒருவர் என்னோடு Muscat -ல் பணிபுரியும் நண்பர் அண்ணாதுரை. அவர்தான் எனக்கு ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிமுகபடுத்தி வைத்தார். இன்னொருவர் பதிவுலக தோழி ஆனந்தி அவர்கள், அவர்தான் நான் என்னுடைய பதிவை யாருமே படிக்கவில்லை என்று விரக்தி அடைந்து இருந்த சமயத்தில், என்னுடைய பதிவை படித்து என்னுடுய எண்ணத்தை புரிந்துகொண்டு எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டவர்.
அதுமட்டும் இல்லாமல் எனக்கு நல்ல ஆலோசைனைகளையும் வழங்கியவர். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க இனிமேல் யாரையும் காப்பி அடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கு சின்ன வயசில் இருந்து சமுதாயத்தில் நல்ல விசயங்களுக்காக பிரபலம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது இந்த பதிவுலகம் மூலம் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
இப்போது என்னுடம் பணிபுரிந்த நண்பர் விடுமுறையில் சென்று உள்ளதாலும் , கொஞ்சம் வேலைப்பளுவும் அதிகமாக இருப்பதாலும் புதிய இடுகைகள் எழுத முடியவில்லை. ஆனந்தி அவர்களின் பின்னூட்டம் படித்தவுடன் புதிய உற்சாகம் வந்துள்ளது. நான் மீண்டும் வந்து கலக்குவேன்.
அதுவரை என்னை மறந்துவிடாமல் அடிக்கடி வந்து பார்த்து விட்டும் போகும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
அழகர்.

Monday, September 13, 2010

யாருக்காவது payanpadum

வணக்கம் Bloggers

நான் சமீபத்தில் கணினி பற்றிய குறிப்புகளை ஒரு இனைய தலத்தில் படித்தேன். மிக அவசியமான குறிப்புகளை இங்கு பதிவு செய்கிறேன். இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். சிலபேருக்கு தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காவது உதவட்டும் என்று இங்கு பதிவு செய்கிறேன்.
மேலும் அதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.
http://computer-tricks.net/

1. Improve the browsing speed of your browsers
IE users:IE users need to edit they registry values. To do so:
1) Go to Start –> Run and type regedit2) Select HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet SettingsChange the values (DECIMAL) to 10 and save.
You are done. Restart the browser and enjoy.
3. Easiest Way to Hide a Folder without any Software
Right click on the folder you want to hide and select Properties –> Customize tab –> Change Icon button.
You will find few blank icons, select one of them and click OK. Folder icon should now have disappeared.
To hide the name box, right click on the folder icon (which is a blank icon) and select “Rename“. Activate the Unlock and press Alt+0160 and then press Enter.
Another one method is Rename or F2, Hold Alt key + 255 in Num pad, release the Alt key.

4. Steps to Make Free International Calls:
Go to ‘Call phones’ option at the bottom left corner of Skype window
Hit the county flag drop down option and and choose ‘United States’ and call on the toll free number – 8003733411
Follow the voice response system and say ‘Free calls’ when prompted, listen to a 20 seconds advertisement and then system will ask you to enter the number you want to call.
Now, using the dial pad, punch in the number that you want to call along with its country code. For example, if you want to call to an Indian mobile number then use this format – ‘919898989898′

The call will automatically get connected but will be limited for just 5 minutes, though you can again follow the same procedure and call back the same number. There’s no limit in the number of calls you make. At times, the service remains busy, in such case you can try following the same procedure. The trick is completely working and tested!

8. Enable or Disable Task Manager in Windows
Task manager comes really handy when your windows hang! This is your last option to kill the useless processes. But sometimes some viruses have a capability to disable task manager from windows. In this situation you are not able to end the hanged applications & heavy processes.

To Enable Task Manager
Start → Run → gpedit.msc (type) → Administrative Templates → System (double click) → Ctrl+Alt+Del options → Remove Task Manager → properties → disable (select) → Ok
To Disable Task Manager
Start → Run → gpedit.msc (type) → Administrative Templates → System (double click) → Ctrl+Alt+Del options → Remove Task Manager → properties → Enable (select) → ஓகே

10. Windows short cut key website: http://support.microsoft.com/kb/௩0௧௫௮௩


நன்றி நல்லவன்.

Friday, September 3, 2010

யார் இந்த inkulaap

வணக்கம் அன்பர்களே,
வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்சிகள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் தற்போது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் உலவி வருகிறது.

Sunday, August 22, 2010

பெரியகோட்டை ஸ்பெஷல்-2

வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டையில் நடுக்கும் திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. நான் மற்றும் என்னை போல் வெளியூரில் இருக்கும் எல்லாரும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவோம். தாமணி செல்லையனார் கோயில் என்று ஒன்று இருக்கிறது . இதுவும் ஐயனார் கோவில்தான்

பெரியகோட்டை ஸ்பெஷல்-1

வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டை என்றவுடன் அங்கு பெரிய கோட்டை இருக்கு என்று நினைக்க வேண்டாம். பெரியகோட்டை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதை பற்றி ஒரு ஐதீகம் உண்டு. முன்பு ஒரு காலத்தில் பூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று இருட்டிய பிறகு விடிவதற்குள் கோயில் கட்டுவார்கலாம். அப்படி பெரியகொட்டையிலும் கட்ட ஆரம்பிக்கும் போது பொழுது விடிந்து விட்டதாம். அதனால் பெரிய சுற்று சுவர் கட்டுவதற்க்கு அடித்தளம் போட்ட படியே பூதங்கள் சென்று விட்டனவாம். அந்த சுண்டு சுவர் அடித்தளத்தை இன்றும் காணலாம். அங்குதான் இந்த காலத்தில் பஞ்சாயத்து எல்லாம் நடக்கும்.

Saturday, August 21, 2010

oru kiramam

வணக்கம் blog nanbarkale

எனது கிராமத்தை பற்றி ஒரு சின்ன அறிமுகம். பெரியகோட்டை என்ற ஊர் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார் பனிரெண்டு கி.மீ மற்றும் புதுவயலில் இருந்து சுமார் ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியகோட்டை பெரிய அரசியல் முக்யத்துவம் உள்ள ஊராக தெரியவில்லை. ஆனால் அப்பகுதி மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மிக்க ஊர். பெரியகோட்டை என்பது முப்பத்தி இரண்டு ஊர்களை அடக்கிய பகுதியை குறிக்கும். தமிழ் சினிமாவில் வரும் பதினெட்டு பட்டி போல் இந்த முப்பத்தி இரண்டு கிராமம். இதை பெரியகோட்டை நாடு என்று சொல்வார்கள். இதற்கு பக்கத்தில் சாக்கை நாடு, தேர் பொய் நாடு, பாலை நாடு மற்றும் வம்பரம்பட்டி என்ற பகுதிகள் உள்ளனன். இந்த நாட்டின் பெயர்களை பார்த்தால் ஊரின் பெயர்களால் பிரிக்கப்பட்ட மாதிரி இருக்கும். ஆனால் உண்மையில் சாதிகளால் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாடுகளில் வருடா வருடம் கோயில் திருவிழா நடக்கும் அப்போது இந்த நாடுகளுக்கு இடையே சண்டைகள் நடக்கும். இதில் உயிர் பலி எல்லாம் நடந்தது உண்டு. பெரியகோட்டையில் முத்திரையர் சமுதாய மக்களும் சாக்கோட்டையில் செட்டியார், கள்ளர், பறையர் என பலதரப்பட்ட மக்களும் வம்பரம்பட்டியில் vallambar சமுதாய மக்களும் தேர் பொய் nattil கள்ளர் சமுதாய மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்த சாதியினருக்குள் யார் பெரியார் என்ற சண்டைதான் திருவிழா காலங்களில் நடக்கும்.