Sunday, October 24, 2010

கடவுளின் சொந்த இடம்

வணக்கம் Bloggers ,
                   சில நண்பர்களை நான் எதாவது கேட்டால் நான் Busy ஆக இருக்கிறேன் என்று அடிக்கடி பீத்திகொல்வார்கள். அதுமாதிரி நீங்களும் இல்லாமல் அவ்வப்போது கீழே இணைக்கப்பட்டுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் இதெல்லாம் ரொம்ப அவசியம். நானும் இனிமேல்தான் சென்று வரவேண்டும்.

Saturday, October 23, 2010

வீடு கட்டும்போது செங்கல் வேளையில் செலவை குறைப்பது எப்படி?

வணக்கம் Bloggers

 இந்தியா சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்னும் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. 
வெள்ளைக்காரனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம் இப்போது அரசியல்வாதிகள் என்ற கொள்ளைக்காரர்களிடம் சிக்கி இருக்கிறது.
இந்த    கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்போது விடுதலை அடைகிறோமோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.
     எனக்கு அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றபடுவதை காண சகிக்கவில்லை. நான் ரொம்ப நாட்களாக மனதிற்குள் குமுறிக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் பிளாக்கர் என்று ஒன்று இருப்பது அண்ணாதுரை என்ற நண்பர் மூலமாக தெரிய வந்தது. சரி நம்ம எண்ணங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று ப்ளாக் எழுத ஆரம்பித்தேன்.
  
இதற்கிடையே பூங்குன்றன் என்ற என்னுடைய நண்பர்  நான் எழுதியதை படித்துவிட்டு, நல்லாத்தான் எழுதுகிறீர்கள் ஆனால் எதனை பேர் வந்தாலும் நம் மக்கள் திருந்த போவதில்லை அதுமட்டுமில்லாமல் அரசியலை பற்றி ஏராளமான பேர் எழுதிகிறார்கள், நீங்கள் வேறு எதாவது உருப்படியாக எழுதுங்கள் என்று கூறினார். 
அவருடைய நல்ல எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்த ப்ளாக்கை எழுதுகிறேன்.
சரி தலைப்புக்கேற்ற விசயத்திற்கு வருவோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களின் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவுக்கு போய்விட்டது. அதிலும் கட்டுமான பொருட்களின் விலை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் வீடு கட்டும்போது செங்கல் வேலையில் செலவை குறைப்பது என்று பார்ப்போம்.
பொதுவாக செங்கல் கட்டு வேலை English Bond அல்லது Flemish Bond என்ற இருவகையில் கட்டுவார்கள். மேற்கண்ட முறையில் செங்கல் கட்டு வேலை செய்யும்போது நிறய செங்கற்கள் தேவைபடுகிறது.

Wednesday, October 20, 2010

ஆசைப்படத்தான் முடியும் என்று நினைக்கிறேன்

வணக்கம் நண்பர்களே,

அய்யா (கயவர்) கருணா மற்றும் சொம்புசிங்கு ஆட்சி நடப்பதால் சாதாரண  மக்கள்   வீடு கட்டுவதை பற்றி ஆசைதான் பட முடியும். அதனால் இந்த படங்களை பார்த்து நீங்களும் ஆசைபடுங்கள் . வேண்டியவர்கள் நல்ல மாடல்களை தேர்ந்து எடுத்து கொள்ளவும்.
இந்த அழகான படங்களை அனுப்பி தந்த தோழி வெண்ணிலா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Model -1

Model -2


Model -3

Model -4

Model -5

Model -6

Model -7

Model -8

Model -9

எல்லாத்தையும் விட இதுதான் சூப்பர் மாடல்.


நன்றி 
Azhagar