Sunday, August 22, 2010

பெரியகோட்டை ஸ்பெஷல்-2

வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டையில் நடுக்கும் திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. நான் மற்றும் என்னை போல் வெளியூரில் இருக்கும் எல்லாரும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவோம். தாமணி செல்லையனார் கோயில் என்று ஒன்று இருக்கிறது . இதுவும் ஐயனார் கோவில்தான்

பெரியகோட்டை ஸ்பெஷல்-1

வணக்கம் அன்பர்களே,
பெரியகோட்டை என்றவுடன் அங்கு பெரிய கோட்டை இருக்கு என்று நினைக்க வேண்டாம். பெரியகோட்டை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அதை பற்றி ஒரு ஐதீகம் உண்டு. முன்பு ஒரு காலத்தில் பூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு ஊராக சென்று இருட்டிய பிறகு விடிவதற்குள் கோயில் கட்டுவார்கலாம். அப்படி பெரியகொட்டையிலும் கட்ட ஆரம்பிக்கும் போது பொழுது விடிந்து விட்டதாம். அதனால் பெரிய சுற்று சுவர் கட்டுவதற்க்கு அடித்தளம் போட்ட படியே பூதங்கள் சென்று விட்டனவாம். அந்த சுண்டு சுவர் அடித்தளத்தை இன்றும் காணலாம். அங்குதான் இந்த காலத்தில் பஞ்சாயத்து எல்லாம் நடக்கும்.

Saturday, August 21, 2010

oru kiramam

வணக்கம் blog nanbarkale

எனது கிராமத்தை பற்றி ஒரு சின்ன அறிமுகம். பெரியகோட்டை என்ற ஊர் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் உள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார் பனிரெண்டு கி.மீ மற்றும் புதுவயலில் இருந்து சுமார் ஆறு கி.மீ தூரத்தில் உள்ளது. பெரியகோட்டை பெரிய அரசியல் முக்யத்துவம் உள்ள ஊராக தெரியவில்லை. ஆனால் அப்பகுதி மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மிக்க ஊர். பெரியகோட்டை என்பது முப்பத்தி இரண்டு ஊர்களை அடக்கிய பகுதியை குறிக்கும். தமிழ் சினிமாவில் வரும் பதினெட்டு பட்டி போல் இந்த முப்பத்தி இரண்டு கிராமம். இதை பெரியகோட்டை நாடு என்று சொல்வார்கள். இதற்கு பக்கத்தில் சாக்கை நாடு, தேர் பொய் நாடு, பாலை நாடு மற்றும் வம்பரம்பட்டி என்ற பகுதிகள் உள்ளனன். இந்த நாட்டின் பெயர்களை பார்த்தால் ஊரின் பெயர்களால் பிரிக்கப்பட்ட மாதிரி இருக்கும். ஆனால் உண்மையில் சாதிகளால் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாடுகளில் வருடா வருடம் கோயில் திருவிழா நடக்கும் அப்போது இந்த நாடுகளுக்கு இடையே சண்டைகள் நடக்கும். இதில் உயிர் பலி எல்லாம் நடந்தது உண்டு. பெரியகோட்டையில் முத்திரையர் சமுதாய மக்களும் சாக்கோட்டையில் செட்டியார், கள்ளர், பறையர் என பலதரப்பட்ட மக்களும் வம்பரம்பட்டியில் vallambar சமுதாய மக்களும் தேர் பொய் nattil கள்ளர் சமுதாய மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். இந்த சாதியினருக்குள் யார் பெரியார் என்ற சண்டைதான் திருவிழா காலங்களில் நடக்கும்.