Wednesday, August 31, 2011

இந்திய அரசின் தமிழகம் மீதான மரியாதை

வணக்கம் தோழர்களே,

                         நான் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்துகளை பார்த்து மிகவும் மனம் நொந்து போயிருந்தேன். அதனால் அரசியல் நிகழ்வுகளில் இருந்து என்னுடைய கவனிப்பை தவிர்த்து வந்தேன். ஆனாலும் சமீபத்தில் தமிழகம் சம்பத்தப்பட்ட விசயங்களில் இந்திய அரசின் ஏலனபோக்கை பார்த்து சும்மா இருக்க முடியவில்லை.


அதனால் இந்த பதிவை எழுதுகிறேன்.

 இந்திய அரசு தமிழக மக்கள் உணர்வுகள் மீதும் தமிழக நலன்கள் மீதும் எவ்வளவு கீழ்த்தரமாக அபிப்ராயம் கொண்டுள்ளதை கீழ்க்கண்ட நிகழ்வுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

   1 . சமீபத்தில் இலங்கை நாடாளமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்திய நாடாளமன்ற நிகழ்சிகளை பார்க்க வந்திருந்தனர். அதை நமது தமிழக MP க்கள் சிலர் எதிர்த்தனர். அதற்க்கு சபாநாயகர் அம்மையார்  இலங்கை காரர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதற்க்கு அவர் சொன்ன காரணம் இலங்கை நமது நட்புறவு நாடு அவர்கள் மனம் நோகக்கூடாது என்று கரிசனம் காட்டுகிறார். ஆனால் இலங்கை காரர்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட தமிழக மக்கள் உணர்வுகளுக்கு கிடையாது என்று பொட்டில் அடித்து சொல்கிறார் . தமிழக மக்கள் மனம் நோகலாம் ஆனால் இலங்கை MP க்கள் மனம் நோகக்கூடாது. இதுதான் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை. உள்நாட்டு மக்களின் உணர்வுகளை விட 1962  இந்திய சீன போரின்போது சீனாவிற்கு support பண்ணிய இலங்கையின் உணர்வுதான் முக்கியம் .

  2 . சமீபத்தில் இந்திய parliment ல் கச்சதீவை மீட்கவேண்டும் என்றும் பங்களாதேசை உறுவாக்கியது போல் தனி ஈழம் அமைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக MP க்கள் கோரிக்கை வைத்தனர். இதற்க்கு பதிலளித்து பேசிய S .M . KRISHANA இலங்கை நமது நட்புறவு நாடு என்றும் அதன் நட்புறவை இந்தியா இழக்க விரும்பவில்லை என்றும் கூறினார். இதிலிருந்து நமக்கு என்ன தெரியுது என்றால் இந்தியாவுக்கு தமிழகம் முக்கியம் இல்லை . இலங்கைதான் மிக முக்கியம் என்று அர்த்தம்.

    கச்சதீவு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு கொடுத்து விட்டார்களாம் அதனால் இதுபற்றி இனிமேல் பேசமுடியாதாம். தமிழக மீனவர்கள் எத்தனை பேர் செத்தாலும் பரவா இல்லை. இலங்கை அரசை பகைத்து கொள்ள மாட்டோம் என்று    S .M . கிருஷன கூறுகிறார்.  இதிலிருந்து தமிழக மீனவர்களின் மீது உள்ள அக்கறையை பாருங்கள். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்து சென்றால் இந்திய மீனவர்கள் என்று சொல்வார்கள். தமிழக மீனவர்களை இலங்கை நாய்கள் பிடித்து சென்றாலும் சரி சித்திரவதை செய்தாலும் சரி தமிழக மீனவர்கள் என்றுதான்  சொல்வார்கள். இல்லையேல் அப்படி சேதியே வராது. இதில் எங்கே இருக்கிறது இந்திய ஒற்றுமை.
 
 பங்களாதேசை போல் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கேட்டதற்கு , இலங்கை இறையாண்மை உள்ள நாடாம் . அதனால் பங்களதேஷ் போல் ஈழம் அமைக்க முடியதாம்.  அப்படியானால்  பாகிஸ்தான் இறையாண்மை உள்ள நாடு இல்லையா ? ஏனென்றால் சிறுபான்மையினர் vote எப்போதுமே congress க்கு முக்கியம். ஆனால் இங்கு தமிழர்களின் vote    வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. சொரணை அற்ற தமிழர்கள் எப்படியும் நமக்கு vote போடுவார்கள் என்றும் தமிழர்களை அழித்தவர்களை அன்னை என்று அழைப்பார்கள் என்றும் அவர்களுக்கு தெரியும்.

 அது  மட்டும்  இல்லாமல் கோத்தபாய ராஜபக்சே தமிழக சட்டமன்ற தீர்மானத்தை பற்றி அவமதித்த பிறகும் ஒரு வார்த்தை கூட கண்டிக்க வில்லை. ஏனென்றால் இலங்கையின் நட்புறவு கேடக்கொடாதாம் .

 3 . ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையாக  குறைக்க வேண்டும்  என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை பற்றி மத்திய சட்ட அமைச்சரிடம் கேட்டபோது . இந்த தீர்மானம் யாரையும் கட்டுபடுத்தாது என்று மிகவும் கேவலமாக பதில் சொல்லுகிறார்.

 ஏற்கனவே இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கொண்டு வந்த தீர்மானத்தில் எந்த பதிலும் சொல்லாத மத்திய அரசு இப்போது மிகவும் அலட்சியமாக பதில் சொல்லுகிறது.
 
 அப்படிஎன்றால் தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு , சட்டமன்றத்திற்கு என்னதான் மரியாதை என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் எப்போதும் தமிழர்களின் எதிரிதான். ஆனால் இரு திராவிட கட்சிகளும் தமிழர்களின் துரோகிகள். இவர்கள் இருவரும் ஈகோ பார்க்காமல் மாநிலம் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளில் இனைந்து செயல் பட்டிருந்தால் பல பிரச்சினைகளில் மத்திய அரசை வழிக்கு கொண்டு  வந்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது இவர்களுக்கு மக்களின் உணர்வுகளை விட தங்களின் நலன்தான் முக்கியம். 

 இனியும் ஒவ்வொரு தமிழனும் விளித்து கொள்ளாவிட்டால் . இந்த வாசகம்தான் உங்களுக்கு .

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல  அவமானங்களை அனுபவிப்போம்.
இந்திய அரசின் பரிசாக 

நன்றி
Azhagar







No comments:

Post a Comment